அதிர்ச்சி... கனடாவில் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி உயிரிழப்பு!
Dinamaalai April 19, 2025 05:48 PM

கனடாவில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா  பரிதாபமாக உயிரிழந்தார். 

 

கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த ஹர்சிம்ரத் ராதாவா (21) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.

 

இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணிக்கு ஹர்சிம்ரத் ராதாவா, சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்

அதில் எதிர்பாராத விதமாக பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் ஹர்சிம்ரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சுடு நடத்திவிட்டு காரில் தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.