“3 மாதத்தில் 1.72 லட்சம் பேர்”… பாகிஸ்தானை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!
SeithiSolai Tamil April 19, 2025 05:48 PM

பாகிஸ்தானில் வசிக்கும் மக்கள் வேலை வாய்ப்புகளை தேடி வெளிநாடு நோக்கி பயணம் செய்கின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 1.72 லட்சம் பேர் வெளிநாட்டிற்கு வேலை தேடி சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுமார் ஒரு லட்சம் பேர் தனிநபர் பிரிவில் பொதுவான வேலைகள் என்ற பிரிவில் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

அதிகபட்சமாக சவுதி அரேபியாவிற்கு 1,21,190 பேரும், ஓமனுக்கு 8,331 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 6,891 பேரும் வேலைக்கு சென்றுள்ளனர்.

இது போக பிரிட்டனுக்கு 1454 பேரும், துருக்கிக்கு 870 பேரும், கிரீஸ் நாட்டிற்கு 815 பேரும், மலேசியாவிற்கு 775 பேரும், சீனாவிற்கு 592 பேரும், அர்பைஜானுக்கு 350 பேரும் ஜெர்மனிக்கு 264 பே, அமெரிக்காவுக்கு 257 பேரும் இத்தாலிக்கு 109 பேரும் ஜப்பானுக்கு 108 பேரும் சென்றுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.