“Fees அதிகமா வேணும்னு சொல்றாங்க”… Exam எழுத விடல… தற்கொலைக்கு முயன்ற மாணவி… கண்ணீர் விட்டு கதறல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
SeithiSolai Tamil April 18, 2025 05:48 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், தேர்விற்காக ‘அதிக கட்டணம்’ செலுத்த முடியாத காரணத்தால் ஒரு மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆரோகி என்ற மாணவி, கல்லூரி வாசலில் பெட்ரோல் கொண்டு வந்து தன்னை தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தக்க சமயத்தில்மாணவியை காப்பாற்றி தடுத்து நிறுத்தினர்.

 

 

முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆரோகி உள்ளிட்ட பல மாணவர்கள் கூடுதல் ரூ.2,000 கட்டணம் விதிக்கப்படுவதை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தனர். நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு விண்ணப்பங்கள் நேரத்தில் சமர்ப்பிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால், தேர்வு தேதி வந்தபோது ஆரோகியின் விண்ணப்பம் மட்டுமே அனுப்பப்படவில்லை. மாணவியின் வலியுறுத்தலையும் எதிர்ப்பையும் நிர்வாகம் புறக்கணித்தது. இதனால் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், ஆரோகி தற்கொலைக்கு முனைந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், நிர்வாகத்துடன் போலீஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தீர்வு எட்டப்படவில்லை. இதனையடுத்து மாணவியின் குடும்பம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றது. கான்பூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து “மாணவி மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கிடையில் கட்டண விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனை” எனக் கூறியுள்ளதுடன், நிலைமை தற்போது சுமூகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவியின் அழுகை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மாணவர்களுக்கு ஏற்படும் கல்விச் சுரண்டலுக்கெதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.