ரயில் பயணிகளே.. உஷாரா இருங்க... கூடுமானவரை ரயில் பயணங்களில் வாய்க்கு ருசியாக என்று வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்துடுங்க. நம்மூரில் மட்டுமே எலி தலை, கெட்டு போன சாம்பார் சட்னி, இட்லிக்குள் ஸ்டேப்ளர் பின் போன்றவை இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில், மும்பையில், வடா பாவிற்குள் சோப்பு துண்டு இருப்பதைக் கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கர்ஜட் ரயில்வே நிலையத்தில் உள்ள உணவுக் கடை ஒன்றில் இருந்து வாங்கிய வடா பாவிற்குள் சோப்புத் துண்டு இருந்தது. ஒரு பெண் பயணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் பிளாட்பார்ம் எண் 2ல் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.
உடனே அந்த பெண் பாதுகாப்பு காவலரிடம் புகார் தெரிவித்தபோதும், அவர் முறையாக நடவடிக்கை எடுக்காமல், 4:30 மணி காலை வரச் சொல்லி தவறான முறையில் நடந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் தகவல் கொடுத்திருந்த நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டது.
பின்னர் ரயில்வே துறை, சம்பந்தப்பட்ட V.K. Jain என்ற கடையின் சேவையை உடனடியாக நிறுத்தி, கடையின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் ரயில் நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு குறித்து கடுமையான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.