மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் ஒரு கணவன் தன் மனைவியை மிகவும் கொடூரமாக தாக்கும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நபர் ஒரு அறையில் வைத்து தன் மனைவியை கிட்டத்தட்ட 50 முறை கன்னத்தில் அறைகிறார். தன் கணவனிடம் இருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்த போதிலும் அந்த பெண்ணால் மீள முடியவில்லை. அந்த தம்பதிகளின் குழந்தைகளும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாயும் அவரை தடுக்க முயல்கிறது. இருப்பினும் அவர் இரக்கமே இல்லாமல் தன் மனைவியை கொடூரத்தனமாக அடிக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. பின்னர் சம்பந்தப்பட்ட கணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் இந்த வீடியோ பழையது என்றும் ஏற்கனவே குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது எனவும் அந்த பெண்ணின் கணவர் இஸ்வர் விளக்கம் கொடுத்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய மனைவி வேறொரு நபருடன் சேர்ந்து வாழ்வதாகவும் அவரை வைத்து தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் அதனால் தான் அடித்ததாகவும் போலீஸிடம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக கடந்த செவ்வாய் கிழமை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
View this post on Instagram