மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காந்த்வா அருகே ஒரு பழமையான கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் இறங்கி 8 பேர் சுத்தம் செய்தனர். அப்போது திடீரென விஷ வாயு தாக்கியதால் 8 தொழிலாளர்களும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிணற்றுக்குள் இருந்து மீட்பு படையினர் சடலங்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அம் மாநில முதல்வர் மோகன் யாதவ் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தலா 4 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.