உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி சிவில் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கறிஞர் 2 பெண்களால்தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் அந்த வழக்கறிஞர் அந்தப் பெண் ஒருவரை தொலைபேசியில் தவறான வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்தப் பெண் நேரடியாக நீதிமன்ற வாசலில் அவரை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இன்னொரு பெண்ணும் அந்த இடத்திற்கு வந்த நிலையில் இருவரும் சேர்ந்து அவரை தாக்கினர்.
இதனை அங்கிருந்த சக வழக்கறிஞர்கள் தடுக்க முயற்சித்த போதிலும் அந்த பெண்கள் விடாது அவரை அடித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.