திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணிதுவக்கிவைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர்ப்பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 250 நவீன வசதிகளிடம் கூடிய கண்காணிப்பு கேமராக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்அர சக்கரபாணி துவக்கி வைத்து பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, சாமிநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டது. மேலும் தொகுதியில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என பேசினார்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்டாக்டர்,எஸ்.பிரதீப். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ், நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, நகர் மன்ற துணை தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்டத் துணைச் செயலாளர்ராஜா மணி,மாவட்ட அவை தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு,உள்ளிட்ட காவல்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.