அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வரும் மாணவி செனல் டாப்பர். இவரது நாக்கு மிகவும் நீளமாக இருப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அதாவது இவரது நாக்கு சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு நீளம் உடையது. இதன் அளவை ஒப்பிட்டால் ஒரு ஐபோனின் நீளத்திற்கு நிகரானதாக இருக்கும். இந்தத் தனித்தன்மை காரணமாக இவர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சராசரியாக இவரது நாக்கு 9.75 செ.மீ(3.8 இன்ச்) உள்ளது.
இவர் தனது 8 வயதில் தனது தாயாருடன் ஒரு ஹலோவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தனது நாக்கு தனித்துவமாக உள்ளதை முதன் முதலில் கண்டறிந்துள்ளார். மேலும் இவர் தனது நாக்கின் மூலம் ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஹோஸ்ட்களின் ஓவியங்களை தனது நாக்கால் வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தற்போது செனல் சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மேலும் இதேபோன்று நீளமான நாக்குடைய சாதனையை ஆண்கள் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டாப்பர்ல் என்பவர் படைத்துள்ளார். இவரது நாக்கின் சராசரி நீளம் 10.1 செ.மீ (3.97 இன்ச்) உள்ளது.
View this post on Instagram