18 வயதிலேயே CEO…. கோடிகளில் வருமானம்… சீட் கொடுக்க மறுத்த பிரபல பல்கலைக்கழகங்கள்… இளம் தொழிலதிபருக்கு வந்த சோதனை…!!!
SeithiSolai Tamil April 03, 2025 04:48 AM

அமெரிக்காவை சேர்ந்த பிரபல Cal AI என்ற நிறுவனத்தின் நிறுவனர் சாக் யாதேகரி (18). இவர் தனது இளம் வயதிலேயே கோடிங் எழுத கற்றுக்கொண்டு தனது 14 வது வயதிலேயே கேமிங் இணையதளத்தை உருவாக்கி ஆண்டுக்கு ரூபாய் 60,000 சம்பாதித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் தனது 18 ஆவது வயதில் Cal AI என்னும் நிறுவனம் மூலம் ஆண்டுக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டி வருகிறார்.

அதாவது இந்திய மதிப்பின்படி ஆண்டுக்கு ரூபாய் 256 கோடி ஆகும். இவர் உருவாக்கிய cal AI செயலியானது, சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் AI தொழில்நுட்ப உதவியுடன் அந்த உணவில் எவ்வளவு கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை நமக்கு காட்டும். இந்நிலையில் சாக் யாதேகரி படிக்க விரும்பி பிரபல பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவில், எம்ஐடி, ஹார்ட்வேர்ட், ஸ்டான்போர்ட், கொலம்பியா உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தன்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சிறிய வயதிலேயே இவ்வளவு திறமையான மாணவரை ஏன் பல்கலைக்கழகங்கள் நிராகரித்தன? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ரெடிட் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியன், “இது முட்டாள்தனமானது” என சாக்கின் பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.