மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பவாய் பகுதியில் செயல்பட்டு வருகிறது பிரபல ஐடி நிறுவனம். இந்நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருபவர் மராத்தி மொழியில் பேச வேண்டும் எனக் கூறிவிட்டனர். இது குறித்து நடைபெற்ற தகராறு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ பதிவில், மராத்தி மொழி தெரியாத செக்யூரிட்டி, ஒரு மராத்தி நபருடன் மராத்தி மொழியில் பேச மறுத்து தகராறில் ஈடுபடுகிறார்.
இதனைத் தொடர்ந்து எம்.என்.எஸ் குழுவினர் நேரடியாக அந்த ஐடி நிறுவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட செக்யூரிட்டியிடம் மராத்தி மொழியை அவமதித்ததற்காக விளக்கம் கேட்டு அந்த செக்யூரிட்டியை அறைந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே மகாராஷ்டிராவில் வாழ விரும்புகிறவர்கள் மராத்தி மொழிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனது தாய்மொழி உரிமை உள்ளது. அதே போல் மகாராஷ்டிராவின் மராத்தி மொழியையும் அவமரியாதை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.