அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!
SeithiSolai Tamil April 04, 2025 01:48 AM

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் சவர்மாவிற்கு பயன்படுத்தப்படும், சிக்கன், குடிநீர், மசாலா பொருட்கள் என, 6 விதமான உணவுப்பொருட்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.