வைரல் வீடியோ... ரீல்ஸ் மோகத்தால் கணவரின் காவலர் வேலைக்கு வேட்டு வைத்த இளம்பெண்!
Dinamaalai April 04, 2025 01:48 AM

சண்டிகர் மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் அஜய். இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவி இருந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதை பணியாக செய்து வந்தார். இவருடைய ரீல்ஸ் மோகத்தால் தற்போது அவருடைய கணவரின் வேலையை இழக்க வேண்டியதாகிவிட்டது. 

ஜோதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் சென்று நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் நடனம் ஆடும் போது வாகனங்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக நின்றதால் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் அதனை ஜோதி பொருட்படுத்தவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் அவருடைய கணவர் அஜய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரீல்ஸ் மோகத்தால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் விபரீதங்களை சிலர் உணராமல் செய்து விடுகின்றனர். எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மனைவியின் லைக் வாங்கும் ஆசையால் கணவன் வேலையை இழந்துள்ளது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.