பிரதமர் மோடியின் பாம்பன் வருகை.. தூத்துக்குடி கடல் பகுதியில் போலீசார் ரோந்து பணி தீவிரம்!
Dinamaalai April 06, 2025 12:48 AM

 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் வருகையையொட்டி தூத்துக்குடி கடல் பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நாளை ஏப்ரல் 6ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு வருகிறார். இதனை தொடர்ந்து கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் படகுகளில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியாக படகுகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கின்றனர். அதே போன்று தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சென்றும் ஆய்வு செய்து வருகின்றனர். தீவுகளில் சந்தேகப்படும்படியாக நடமாட்டங்கள் உள்ளதா என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதே போன்று கடலோர கிராம மக்களை சந்தித்து சந்தேகப்படும்படியான நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.