NPS வாத்சல்யா திட்டம் VS சுகன்யா சம்ருதி யோஜனா: இதில் உங்க குழந்தைக்கு எது பெஸ்ட்..? பெற்றோரே இதோ தெரிஞ்சிக்கோங்க…!!
SeithiSolai Tamil April 06, 2025 04:48 PM

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் இன்றியமையாக ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் எதிர்காலத்தில் குழந்தைகளுடைய கல்வி, திருமணம் அனைத்திற்குமே இப்போது இருந்தே பணத்தை சேமித்து வைத்தால்தான் சரியாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கு பயன்பாடும் விதமாக சில சிறப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. இதில் NPS வாத்சல்யா திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்ட முக்கியமான ஒன்று. இதில் எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்று பல பெற்றோர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். NPS வாத்சல்யா திட்டம் முதலீட்டு திட்டம். இது அதிகமான வருமானத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 10 முதல் 12 சதவீதம் வட்டி.

11 சதவீதம் ஆண்டு வட்டியில் 10 வருடம் முதலீட்டு காலத்திற்கு இந்த திட்டத்தில் பத்தாயிரம் ரூபாயை முதலீடு செய்தால் மொத்த கார்பஸ் 1.86 லட்சம் ரூபாயாக இருக்கும். 18 வயது பூர்த்தியான பிறகு நிலையான கணக்கிற்கு மாறுகிறது. இந்த மாற்றம் 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்ய அனுமதிக்கிறது.

சுகன்யா சம்ருதி யோஜனா திட்டமானது பெண் குழந்தைகளுக்கான வடிவமைக்கப்பட்ட அரசாங்க சேமிப்பு திட்டம். தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும். ஒரு வருடத்திற்கு 10,000 முதலீடு செய்தால் இந்த திட்டத்தில் 1.58 லட்சம் கார்பஸ் கிடைக்கும். 18 வயதுக்கு பிறகு கூடுதல் பங்களிப்பு எதுவும் இல்லாமல் ஆறு வருட கூடுதல் வட்டியை பெறலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.