இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? “பென்குயின்களுக்கும் 10% வரி விதித்த டிரம்ப்”… மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!!
SeithiSolai Tamil April 06, 2025 04:48 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த புதிய வரி விதிப்புகள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு சுமையாக உள்ள நிலையில், அதிலும் ஒரு அதிசயமான அறிவிப்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ட்ரம்ப் அறிவித்த 10% வரி, அண்டார்க்டிகாவில் உள்ள மக்கள் இல்லாத எரிமலைத் தீவுகள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளில் பென் குயின்கள், கடற்புலிகள் மற்றும் பனிக்கட்டிகள் மட்டுமே இருக்கிறது. அத்துடன், ஆஸ்திரேலியாவும் இந்த வரி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 


இந்த விசித்திர அறிவிப்பு இணையத்தில் மீம்ஸ் புயலை உருவாக்கியுள்ளது. ட்ரம்ப் மற்றும் பென் குயின்களை வைத்து வெகுவேறு காமெடி மீம்கள் X வலைதளத்தில் வைரலாக பரவுகின்றன. ஒரு மீமில் ‘No Tarifs’ என பதாகைகளை பிடித்து பேன் குயின்கள் போராடும் காட்சியும், மற்றொன்றில் “Peace Was Never An Option” எனக் கூறும் கோபமான துப்பாக்கியுடன் இருப்பதையும் காணலாம். மேலும், Heard தீவு மற்றும் McDonald தீவிலிருந்து பென் குயின்கள் பைகளை கொண்டு வெளியேறும் வீடியோவும் “இதற்கு தான் நாங்கள் வாக்களித்தோமா” என கேட்கும் பதிவும் வைரலாகியுள்ளது.

 

மேலும், ட்ரம்ப் 2,000 பேர் வாழும் சதுப்பு நிலமிக்க தென் பசிபிக் தீவான Norfolk Island மீது கூட 29% வரி விதித்துள்ளார். அந்த தீவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே இல்லை என்றாலும், வரி அறிவிப்பால் நகைச்சுவையான விமர்சனங்கள் தொடர்கின்றன. இதனையடுத்து, ட்ரம்பின் வரி அறிவிப்புகள் ஒரு பார்வையில் சீரியசான பொருளாதார விஷயமாக இருந்தாலும், இன்னொரு பார்வையில் மீம்களின் உலகத்தில் ஒரு காமெடி களமாக மாறியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.