ஒவ்வொரு ஆண்டும் உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை, இந்த ஆண்டு 39வது முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 3,028 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட 247 பேர் அதிகமாக இந்த வருட பட்டியலில் இணைந்துள்ளனர். எலான் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), டெஸ்லா நிறுவனங்களின் வளர்ச்சியால் 342 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகளவில் 18-வது இடத்திலும் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 90.2 பில்லியன் டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கெளதம் அதானி 28-வது இடத்தில் 56.3 பில்லியன் டாலர்களுடன் உள்ளார். இந்தியா, பில்லியனியர்களின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 205 பில்லியனியர்கள் உள்ளனர் என்பது பெருமைக்குரியது.
இந்த பட்டியலில் 406 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், உலகின் பணக்கார பெண்ணாக Walmart வம்சத்தையச் சேர்ந்த அலைஸ் வால்டன், 101 பில்லியன் டாலருடன் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், HCL நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் இந்த ஆண்டின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்த முதல் இந்திய பெண்ணாக உள்ளார். ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெகரும் இந்த ஆண்டு முதல்முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.