புகழ்பெற்ற உணவு விநியோக நிறுவனமான Zomato, வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றி வந்த 600 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணமாக, “NUGGET” எனும் செயற்கை நுண்ணறிவு (AI) செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் தரும் புகார்களுக்கு தீர்வு காணும் பணியில் இப்புதிய AI செயலி பயன்படுத்தப்படுவதால், ஊழியர்களின் தேவை குறைந்துவிட்டதாக Zomato தெரிவித்துள்ளது.
Zomato நிறுவனத்தின் வாக்குமூலத்தின்படி, NUGGET செயலி மூலம் 80% வாடிக்கையாளர் புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்க முடிகின்றது. இதன் விளைவாக, பலர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்த நிலைமை, தொழில்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் விகிதம் அதிகரித்துள்ளதையும், அதனால் வேலைவாய்ப்பின் மீது உள்ள அபாயமும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
AI தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைகளை அளிப்பதோடு, வேலைவாய்ப்பை பாதிக்கும் நிலைமைக்குத் தள்ளும் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.