“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”... பரபரப்பு சம்பவம்..!!
SeithiSolai Tamil April 02, 2025 12:48 AM

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர் கராச்சியில் LeT-வுக்காக நிதி சேகரிக்கும் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்துள்ளார்.

அதோடு பல பகுதிகளிலிருந்து நிதி சேகரிப்பவர்கள் அவரிடம் பணத்தை கொண்டு வந்து இவரிடம் ஒப்படைப்பார்கள். அதனை அவர் மேலதிகாரிகளிடம் அனுப்பும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரமலான் திருநாள் அன்று பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் தனது கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு நபர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அதன் பின் அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார்.

அந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்துல் ரகுமான் பற்றிய பல திடுக்கிடும் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நடந்த பல தீவிரவாத சம்பவங்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ரேசி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் கடந்த 2021 ம் ஆண்டு நடந்த யாத்திரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவைகளில் இவருக்கு தொடர்பு இருக்கிறது. அதோடு இவர் இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரை கொலை செய்த அந்த 2 நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.