ஐ.பி.எல்.2025: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எது..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு..!
Seithipunal Tamil March 28, 2025 07:48 AM

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியின் 18-வது சீசன் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.  2008-ம் ஆண்டு அறிமுக படுத்தப்பட்ட இந்த தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றன.

இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 05 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

ரசிகர்களின் மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த 18 வது தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள 04 அணிகள் குறித்த தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். அவரது கணிப்பின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 04 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.