கர்நாடகாவில் பால் விலையை லிட்டருக்கு ரூ.05 உயர்த்த வேண்டும் என பால் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பால் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். கூட்ட முடிவில் பால் விலை உயர்வு குறித்து அமைச்சரவையில், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.04 உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, பால் விலை உயர்வு ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை உயர்வின் பயன் முழுவதையும் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி நந்தினி பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ததை ரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக இந்த விலை உயர்வை அமல்படுத்துவதாக கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சரவை முடிவின்படி, நீல நிற பாக்கெட் பால் ஒரு லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆக அதிகரிக்கப்படுகிறது.