விசில் போடு..! இந்திய அணிக்கு பணத்தை வாரி இறைத்த BCCI… மொத்தம் இத்தனை கோடியா..??
SeithiSolai Tamil March 20, 2025 09:48 PM

சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ஐசிசிஐ 58 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. இந்த தொகையில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு மூன்று கோடியும். துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா 50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்னும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன்பாக 2002 ,2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது. இதில் 2002 வருடம் சாம்பியன் கோப்பை தொடரை இலங்கை அணியோடு பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.