நமது அண்டை மாநிலமான கேரளாவின் எல்லை பகுதியில் இருந்து சந்தேகத்திற்டமான வாகனம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாகனத்தின் ஓட்டுநர் நாய்களை தமிழக எல்லையான திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அவிழ்த்து விட முயற்சித்தார். இதைப்பார்த்த அபகுதியில் உள்ள பொது மக்கள் அந்த வாகனத்தை விரட்டி பிடித்தனர்.
பின்னர், அதே வாகனத்தில் மீண்டும் அந்த நாய்களை ஏற்ற வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் நாய்களை அவிழ்த்துவிட்டு நபருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.