டாஸ்மாக் நிர்வாகம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க கோரி வழக்கு!!!
Seithipunal Tamil March 20, 2025 07:48 AM

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி  மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வகையில்,'அமலாக்கத்துறை சோதனை மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை நடந்தது  சட்டவிரோதமானது' என அறிவிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அந்த மனுவில், 'விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தற்போது அரசியல்வாதிகளிடையே பேசுபொருளாகி இருக்கிறது.தி.மு.க கட்சியினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக எதிர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.