மின் கம்பம் விழுந்து 'கர்ப்பிணி' பெண் உட்பட 2 பேர் பலி..!
Newstm Tamil March 19, 2025 07:48 PM

மின் கம்பம் சரிந்து விழுந்ததில் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் சுமதி மற்றும் சோனி குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் - அவர்கள் கர்ப்பிணிகள் என்று கூறப்படுகிறது. 

பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த சுமதி (35) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் வசிக்கும் பகுதியில் 4 மாத கர்ப்பிணி பெண் சோனி குமாரி (35) வசித்தார்.

இருவரும் தங்கள் குழந்தைகளை டியூசனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், பொக்லைன் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சரிந்து சுமதி, சோனி மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர்.

இதுதொடர்பாக பொக்லைன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

கம்பம் பெண்கள் மீது சரிந்து விழுந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர்கள் இறந்தனர். இருப்பினும், அவர்களின் குழந்தைகளுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பையப்பனஹள்ளி காவல் நிலையத்தில் ஜேசிபி ஓட்டுநர் மற்றும் சாலை ஒப்பந்ததாரர் மீது அலட்சியத்தால் மரணம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "சம்பவம் தொடர்பாக ஜேசிபி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார், மேலும் விசாரணை நடந்து வருகிறது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.