சிறகடிக்க ஆசை: பிரவுன் மணி புரமோ போட்டு ஒரு வாரமாக இழுத்து கொண்டு போகும் இயக்குனர்..
Tamil Minutes March 19, 2025 03:48 PM

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், பிரவுன் மணி அண்ணாமலை குடும்பத்தினரிடம் சிக்கும் புரோமோவை கடந்த ஒரு வாரமாக வெளியிட்டுவிட்டு, அந்த காட்சியை ஒளிபரப்பாமல் இயக்குநர் ஏமாற்றிக் கொண்டிருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக “அடுத்து வருவது” என்ற புரோமோவில் பிரவுன் மணி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தும், எதிர்பார்த்த காட்சி ஒளிபரப்பப்படவில்லை.

இன்றைய எபிசோடில், சாமியார் மீண்டும் மனோஜை ஏமாற்றிவிட்டு செல்லும் காட்சிகளும், அதன் பின் மனோஜ் பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், மனோஜ் ஏமாந்த 30 லட்சம் ரூபாய் தொடர்பாக, “நாமே தீவிரமாக தேட வேண்டும்” என்று முத்து மீனாவிடம் கூறுகிறார். தனக்கு தெரிந்த கால் டாக்ஸி டிரைவர்களிடம் மனோஜை ஏமாற்றி சென்ற கதிரின் புகைப்படத்தை அனுப்புகிறேன்” எனவும் சொல்கிறார்.

இந்த நிலையில், மனோஜ் பிறந்தநாளுக்கு ரோகிணி ஸ்பெஷலாக கேக் ஆர்டர் செய்ய, அதேபோல் ஒரு விலை உயர்ந்த காரையும் தவணை முறையில் வாங்குவதற்காக ஆர்டர் செய்கிறார். இதைச் சுற்றியுள்ள காட்சிகள், மனோஜை முத்து கலாய்க்கும் காட்சிகள், மீனா அவரை சமாதானப்படுத்தும் காட்சிகள் என, பயனற்ற காட்சிகளாக மாறி மாறி வருகின்றன.

அண்ணாமலை குடும்பத்தினர், பரசுவின் மகள் திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்லும் காட்சிகளும், அங்கு பரசு நலம் விசாரிக்கும் காட்சிகளும் உள்ளன. பார்வையாளர்கள் அண்ணாமலை குடும்பத்தினர் பிரவுன் மணியை சந்திக்கும் காட்சியை எதிர்பார்த்திருந்த நிலையில், இயக்குநர் அதை தவிர்க்க முற்பட்டிருப்பது கவலைக்குரியது.

எதிர்பார்ப்பு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இந்த தள்ளிவைக்கும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இன்றைய எபிசோடிலும், அண்ணாமலை – பிரவுன் மணி சந்திப்பு நடைபெறவில்லை. மேலும், இன்றைய “அடுத்து வருவது” காட்சியிலும், மீண்டும் அதே காட்சிகள் மட்டுமே இயக்குநர் காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த வாரத்திலாவது இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.