சென்னையில் இன்று ஒரு சில ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்ஸி செய்திகளை கட்டுப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, இவர்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் போராட்டத்தை கைவிட வேண்டுமென்று அவர் கூறினார். அதோடு சென்னையில் குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் ரூ.2000 பாஸ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.