100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்போம்... 5 மணி நேரம் போலீஸ் காவலில் இருக்க முடியாதவர் நாட்டுக்கு என்ன செய்வார்? சேகர் பாபு ஆவேசம்!
Dinamaalai March 19, 2025 12:48 PM

நூறு அண்ணாமலை வந்தாலும் களத்துல சந்திப்போம். அஞ்சு மணி நேரம் போலீஸ் காவலில் இருக்க முடியாமல் ஃப்ளைட்டை தவறவிட்டுவிட்டேன் என்று சொல்பவர் நாட்டுக்காக என்னத்தை செய்வார் என்று அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

அண்ணாமலை கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, மத்தியப் பிரதேசத்தில் மோடி ஆட்சி நடைபெறுகிறது அங்கே போய் மோடி படத்தை மாட்டட்டும். நாங்கள் வேண்டுமென்றால் ஆணி சப்ளை செய்கிறோம் என்று அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் 5 மணி நேரம் போலீஸ் காவலில் இருக்க முடியாமல் ப்ளைட்டுக்கு போகனும், ப்ளைட்டை விட்டுட்டேன் என்று சொல்பவர் நாட்டு மக்களுக்காக என்னத்தை செய்து விடுவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சேகர்பாபு.

அமைச்சராக இருந்து பேசவில்லை. அண்ணா சொன்னது போல் கொள்கை எங்கள் வேட்டி, பதவி தோளில் போடும் துண்டு. கட்சியின் தொண்டனாகச் சொல்கிறேன். ஒரு அண்ணாமலை இல்லை நூறு அண்ணாமலை வந்தாலும் களத்தில் சந்திப்போம் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.