கதறித் துடித்த பெற்றோர்... 2 வயது சிறுவன் தொட்டி நீரில் மூழ்கி பலி...!
Dinamaalai March 19, 2025 04:48 PM


தமிழகத்தில் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, செந்தில் நகர் - சிவசக்தி வீதியில் வசித்து வருபவர்   கமலக்கண்ணன், மீனா தம்பதியினர். இவர்கள் சந்தையில் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அனுஷ்கா ஸ்ரீ (6) என்ற மகளும், சிரஞ்சீவி விக்ரம் (2) மகனும் இருந்தனர்.

இதில்  நேற்று மாலை சிரஞ்சீவி விக்ரம் காணாமல் போய்விட்டார். இதனை அறிந்த பெற்றோர்கள் அங்கும், இங்குமாக தேடி பார்த்தனர். சிரஞ்சீவியை எங்குமே காணவில்லை.  இந்நிலையில் இன்று காலை தங்களது வீட்டு வாசலில் முன் பழுதடைந்த மேல்முடி கொண்ட நிலமட்ட தொட்டியின் உள்பகுதியில் சிரஞ்சீவி விக்ரம் மிதந்து இருப்பதைக் கண்டு பெற்றோர் கத்தி கூச்சலிட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக  பெற்றோர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக  தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.