அங்கான்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அங்கன்வாடி பணியாளர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அங்கன்வடி உதவியாளர் பணிக்கு 20 முதல் 40 வயரை இருக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:- இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விரைவில் மாவட்ட வாரியகா காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியானதும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.