பேரீச்சம்பழம் மற்றும் எள் நம் உடலில் எந்த நோயை தடுக்கும் தெரியுமா ?
Top Tamil News March 18, 2025 01:48 PM

பொதுவாக ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருந்தால்  உடல் சோர்வு ,களைப்பு எப்போதும் இருக்கும் .இதற்கு இரும்பு சத்துள்ள மலிவான விலையில் கிடைக்கும் ஏராளமான உணவு பொருட்கள் உள்ளது .அதில் சில பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
1.தினையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டு வந்தால் நல்லது .
2.மேலும் பேரீச்சம்பழம் மற்றும் எள்  கூட
நமது உடலில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் சில உணவு வகைகளை எப்படி தயாரித்து ஹீமோகுளோபின் அளவை உயர்த்தலாம் என்று பார்க்கலாம்


3.இரும்பு சத்துள்ள ,மலிவான பசலைக்கீரை 250 கிராம் தக்காளி 100 கிராம் எடுத்துக்கொள்ளவும் .பிறகு 4 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சீரகத்தூள் கலந்து ஐந்து நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை இந்த கீரையை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும் .இதை  தினமும் இரு முறை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து நமது ஆரோக்கியம் மேம்படும் .
4.அடுத்து விலை மலிவான பீட்ரூட், மாதுளை, பசலைக்கீரை, கேரட் சம அளவு எடுத்துக்கொள்ளவும் . பிறகு அதை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும் .
5.அதை  குடிக்கும் முன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும் .இதை  தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு கணிசமான அளவு உயர்ந்து உங்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று பல சித்த மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.