நாக்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களால் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. அங்கு பிறவியை வதந்தி ஒன்றை அடுத்து இந்த வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், இன்று மார்ச் 17 தேதி மாலை ஒரு பிரிவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. அத்துடன், மாலை நேரத்தில், ஒரு பிரிவினர் மத நிந்தனை செய்து விட்டதாக வதந்திகள் பரவியதையடுத்து வன்முறைகள் வெடிக்க தொடங்கின. இதனால் ஆத்திரத்தில் ஒரு பிரிவினர் வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதனால் அந்த நகரம் முழுவதும் பெரும் பரபரப்பும் நிலவியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், நாக்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, 'வன்முறை சம்பவங்களுக்கு வதந்தி பரவியதே காரணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாகபூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.