கீழா நெல்லி எந்த நோய்க்கு சிறந்த மருந்து தெரியுமா ?
Top Tamil News March 18, 2025 01:48 PM

பொதுவாக உடல் சூடாவதனால் சளி பிடித்து ,உடலில் புளிப்பு தன்மை அதிகமாகி ,பித்தம் உடல் முழுவதும் வியாபித்து ,மஞ்சள் காமாலை நோய் தோன்றுகிறது .மேலும் பழைய உணவுகளை சூடு படுத்தி உண்பதாலும் ,காமாலை நோயுள்ளவரின் யூரின் மூலமாகவும் இந்த மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது .இந்த நோய்க்கு சிறந்த மருந்து கீழா நெல்லிதான் ,மேலும் இந்த மஞ்சள் காமாலை நோய்க்கு சில இயற்கை வைத்தியம் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்
 
1.முதலில் வேப்பிலை ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு இரண்டையும் தண்ணீரில் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்
2.பின்னர் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் சாப்பிடவும்.  3.மஞ்சள் காமாலை அதிகம் இருந்தால் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
4.இப்படி சாப்பிட்டு  சாப்பிட்டு வந்தால் பூரண குணமடைந்து விடுவீர்கள்


உணவு பத்திய முறைகள்
5.நன்றாக பசி எடுக்கும் வரை உப்பு சேர்க்கக்கூடாது.
6.நன்றாகப் பசித்த பின்பு உப்பை வறுத்து பாதி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.  
7.டீ காபி முதலியன நீர் ஆகாரங்கள் சாப்பிடக்கூடாது.
8. நல்லெண்ணெயில் சீரகம் போட்டுக் காய்ச்சிய சீரகம் கருப்பு நிறம் மாறும் போது இறக்கி ஆறவிட்டு ஒன்று விட்டு ஒரு நாள் ஒரு தேக்கரண்டியளவு தலைக்கு தேய்த்து சீயக்காய் போட்டு ஐந்து நாட்கள் வெந்நீரில் குளிக்கவும்
9.  எண்ணெய் பலகாரங்கள் இரண்டு மாதங்கள் சாப்பிடக்கூடாது ஆறு மாதங்கள் வரை மாமிச உணவுகள் சாப்பிடக் கூடாது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.