மனோஜுக்கு வாய் அடங்கவே அடங்காது போல… அடிதடியை அமைதியாக்கிய ஸ்ருதி!
CineReporters Tamil March 17, 2025 03:48 PM

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

மீனா வீட்டிற்கு செல்வம் வர அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கிறார். முத்து வந்துவிட செல்வம் மற்றும் அவர் மனைவியை சாப்பிட அழைக்க அவர்கள் முதலில் மறுத்து விடுகின்றனர். பின்னர் முத்து சொல்வதைக் கேட்டு அவர்கள் சாப்பிட அமர்ந்து விடுகின்றனர்.

அந்த நேரத்தில் மனோஜ் சாப்பிட செல்ல இருக்கும்போது மீனா ஒரு பத்து நிமிஷம் காத்திருக்குமாறு கேட்கிறார் அதை ரோகிணி வந்து மனோஜிடம் சொல்ல என்ன ஹோட்டல் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க எனக்கு நேரமாச்சு என சத்தம் போடுகிறார்.

மேலும் கண்ட கண்டவங்க வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். நான் காத்திருக்கணுமா என அவர் கத்திக் கொண்டிருக்க உள்ளே வந்து முத்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இதை கேட்ட செல்வம் மற்றும் அவர் மனைவி எழுந்து சென்று விடுகின்றனர்.

வெளியில் வரும் மனோஜ் போய்விட்டார்களா எனக் கூறி சாப்பிடா அமர கடுப்பான முத்து தோசையை மொத்தமாக மனோஜ் வாயில் அழுத்துகிறார். இதற்கு தானே இவ்வளவு பிரச்சனை பண்ண என முத்து கேட்க என்ன கொலை பண்ண பாக்குறியா நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்கிறார்.

இதை கேட்ட முத்து கடுப்பாகி கத்தியை எடுக்க அந்த நேரத்தில் அங்கு வரும் சுத்தி நம்ம இங்க என்ன நடக்கிறது என சத்தம் போடுகிறார். ரோகிணி நல்லவேளை ஆண்ட்டி நீங்க வரலனா இவர் மனோஜை குத்தி இருப்பார் எனக் கூற ஸ்ருதி வாய மூடு ரோகினி உங்க ஹஸ்பண்ட் மேல தான் மொத தப்பு என்கிறார்.

அது மட்டுமில்லாமல் இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு உடனே சாரி சொல்லுங்க என்கிறார். மாமா வந்தால் மன கஷ்டப்படுவாரு என மீனா முத்துவை சமாதானம் செய்து மன்னிப்பு கேட்க வைக்கிறார். ரோகிணி அங்கிள் வந்தா முத்துக்குதான் சப்போர்ட் செய்வார்கள் எனக்கூறி மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

ஸ்ருதி தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்த அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு கிச்சனுக்கு வர மீனாவிடம் ஒரு கேமை காட்டி சிரித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது ரோகிணி வர என்ன சிரிப்பு என கேட்க சும்மா ஃபன் என ஸ்ருதி கூறுகிறார். இங்கு எல்லாருக்குமே அப்படித்தான் இருக்கு என நக்கலாக பேசுகிறார் ரோகிணி.

பின்னர் ஜோடிகள் மூவரும் சேர்ந்து ஒரு கேம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது வீட்டிற்கு வரும் ஒருவர் கார் கற்றுக்கொள்ள வந்திருப்பதாக கூறி முத்துவை கீழே அழைத்து செல்கிறார். அதை பார்த்த முத்து அதிர்ச்சியாக நிற்கிறார்.

பின்னர் மீனாவை அழைக்க கார் கத்துக்க ஒரு அம்மா வந்திருப்பதாக கூறுகிறார். யார் என கேட்ட மீனாவை போய் பாக்குமாறு முத்து கூற அங்கு சிந்தாமணியின் கார் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் சிந்தாமணி முத்து மற்றும் மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.