அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்புகளும் வரவில்லை.
அவர் பூரண நலம் பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலை தூங்கி எழுந்த ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி இருந்தது. இதனால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளதாக அவரது மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், நண்பர்களே, குடும்ப உறவுகளே, நலம் விரும்பிகளே உங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பு, ஆதரவுக்கு கடமைப்பட்டுள்ளோம். எனது தந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமுடன வீடு திரும்பினார். உங்களது அன்பும், ஆதரவும் தொடர விழைகிறேன் என கூறியுள்ளார்.