சுற்றுலா சென்ற மாணவ-மாணவிகள் வாகனம் விபத்தில் சிக்கி அதிர்ச்சி.. 11 பேர் காயம்.!
Tamilspark Tamil March 16, 2025 03:48 AM

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம், பகுதியில் என்.ஆர் பப்ளிக் சீனியர் செக்ண்ட்ரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு என பள்ளி வாகனமும் இருக்கிறது. இதனிடையே, பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவியர்களின் 30 பேர், பள்ளியின் வாகனத்தில் பூம்புகாருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, மனகெதி சுங்கச்சாவடி பகுதியில் வேன் சென்றுகொண்டு இருந்தது.

அங்கு திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுங்கச்சாவடியின் ஜெனரேட்டர் அறையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஆசிரியர், மாணவ -மாணவியர்கள் என 11 பேர் காயம் அடைந்தனர்.

இதையும் படிங்க:

விபத்து ஏற்பட்டதைத்தொடர்ந்து குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.