இந்தியாவின் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் டௌசா மாவட்டத்தில் ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ் என்பவர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அசோக், பப்லு, கலுராம் என்ற 3 பேர் நூலகத்திற்குள் நுழைந்து, ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹன்ஸ்ராஜுக்கு வண்ணம் பூச முயற்சித்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது தகராறாக முற்றியது. இதனைத் தொடர்ந்து நூலகத்திற்குள் வைத்தே அவர்கள் 3 பேரும் பெல்ட்டை பயன்படுத்தி அந்த இளைஞரை கழுத்தை நிறுத்தி கொலை செய்தனர். இதில் ஹன்ஸ்ராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் இது குறித்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.