பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோகித் சர்மா தான் வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊடகங்கள் குறைக்கூறி வந்தன.
இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறியதா,ல் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.
ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்துள்ளார்.
எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது.அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது.இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர்.