சிந்தாமணி சதி சரிந்தது.. மீனா புத்திசாலித்தனத்தால் வெற்றி.. சிக்கினார் சிங்கப்பூர் மாமா!
Tamil Minutes March 15, 2025 04:48 PM

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் மண்டப ஓனர், சிந்தாமணி மற்றும் மேனேஜர் ஆகிய இருவரையும் திட்டி, அந்த பணத்தை மீட்டெடுத்து மீனாவிடம் கொடுக்கிறார்.

“உன்னுடைய நேர்மைக்கு நீ கண்டிப்பாக முன்னேறுவாய்! இதேபோல் நிறைய ஆர்டர் எடுத்துக்கோ! இனிமேல் என் மண்டபத்தில் வரும் ஆர்டர்கள் எல்லாமே உன்னுக்குத்தான்,” என்று கூற, ஆனந்தக் கண்ணீருடன் மீனா அவருக்கு நன்றி கூறுகிறார்.

அதன் பிறகு, சிந்தாமணியிடம் “வாழு… வாழ விடு” என்று கூறி, சவால் விட்டுவிட்டு மீனா வெளியேறுகிறார். இதற்குப் பிறகு, அவர் பைனான்சியரிடம் சென்று, வாங்கிய பணத்தை கொடுப்பதற்காக செல்கிறார்.

பைனான்சியர், “ஏன் தாமதம்?” என்று கேட்கிறார். அதற்கு மீனா, “சிந்தாமணி செய்த சதியால் தான் காலதாமதம் ஆனது,” என்று பதிலளிக்கிறார். இதைக் கேட்ட மண்டப ஓனர் அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில், ஏற்கனவே சிந்தாமணியின் புகைப்படம் மண்டப ஓனரின் வீட்டில் இருந்ததால், அவர் அவருக்கு நெருக்கமான உறவினராக இருக்கலாம் என காட்டப்படுகிறது.

இருப்பினும், பைனான்சியர் “எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பணம் வாங்கிக்கொள்! அந்த சிந்தாமணியை தோற்கடிக்க நீ என்ன உதவி கேட்டாலும் நான் செய்கிறேன்” என்று மீனாவிடம் உறுதியளிக்கிறார்.

இதற்குப் பிறகு, மீனா, முத்துவிடம் நடந்ததை கூறுகிறார். அதற்கு “என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அந்த மேனேஜரின் கன்னத்தில் அறைந்திருப்பேன்!” என்று முத்து பதிலளிக்கிறார். மீனா “அதனால்தான் சொல்லவில்லை, ஆனால் பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது” என்று கூறுகிறாள்.

முத்து வீட்டிற்குத் திரும்பிய பின், மீனா மற்றும் முத்து, நடந்ததை அண்ணாமலையிடம் கூறுகின்றனர். அண்ணாமலை, மீனாவை பாராட்டி, “என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?” என்று கேட்கிறார். அப்போது, ஸ்ருதி “எனக்குத் தெரியும் அங்கிள், நான்தான் சிந்தாமணி போல் உதவி செய்தேன்” என்று சொல்கிறார். அப்போது ரவியும் மீனாவை பாராட்டுகிறார். ஆனால் வழக்கம்போல் மனோஜ், மீனாவை மட்டமாக பேசி, முத்துவிடம் மொக்கை வாங்கி கொள்கிறார். இதனையடுத்து அனைவரும் மீனாவை வாழ்த்த, முத்து, மீனாவுக்கு மாலை அணிவிக்கிறார்.

அதன்பிறகு, பரசுவின் மகளின் திருமணம் குறித்து அனைவரும் பேசுகின்றனர். இதைப் பார்த்த விஜயா, கோபத்துடன் உட்கார்ந்து இருக்கிறார். ஸ்வீட்டை கூட வாங்க மறுக்கிறார்.

அடுத்த நாள் எபிசோடில், பரசுவின் மகளின் திருமணம் நடக்கிறது. அங்கு ரோகிணியின் “சிங்கப்பூர் மாமா” என்ற வேஷத்தில் இருந்த பிரெளன் மணி தண்டபடலாக கல்யாண வேலை பார்த்துக்கொண்டு இருப்பதை அண்ணாமலை, முத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் கவனிக்கிறார்கள். இதனால், அவரின் பொய் வேஷம் அடுத்த வாரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.