பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்களின் வரிப்பணத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "கலைஞர் நூற்றாண்டு நினைவு" என்கிற ஸ்டிக்கர் ஒட்டி பெயர் சூட்டும் திமுக அரசு..!!
கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலில் கொண்டு வந்த திட்டம் மது விற்பனை திட்டம் தான்..!!
ஆகவே முன்னாள் முதல்வர் திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களை பெருமைபடுத்தும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் "கலைஞர் மதுபான விற்பனை நிலையம்" என பெயர் சூட்டுமா திமுக அரசு?
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் கருணாநிதி உருவத்தை அச்சிட்டு "கலைஞர் நூற்றாண்டு நினைவு மதுபான விற்பனை" என ஸ்டிக்கர் ஒட்டுமா?
மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் எல்லா திட்டங்களுக்கும் "கலைஞர் நூற்றாண்டு நினைவு" என்கிற பெயர் சூட்டும் திமுக கருணாநிதி அவர்கள் அறிமுகம் செய்த மதுபான விற்பனை திட்டத்திற்கு மட்டும் அவரது பெயரை சூட்டாமல் இருப்பது அவரது புகழை இருட்டடிப்பு செய்யும் செயல் அல்லவா?
ஆகவே திறனற்ற திராவிட மாடல் ஆட்சியின் பயனற்ற தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.
மதுபான கொள்முதலில் ரூ.1000/- கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு "கலைஞர் மதுபான விற்பனை நிலையம்" என பெயர் சூட்டுவது ஏக பொருத்தமாக இருக்கும் என பரிந்துரைக்கிறேன்..!!
பூரண மதுவிலக்கை இரத்து செய்து தமிழகத்தில் மது விற்பனையை அறிமுகம் செய்த உங்கள் தந்தையை பெருமைப்படுத்த டாஸ்மாக் கடைகளுக்கு உங்கள் தந்தையின் பெயரை சூட்டுவீர்கள் என்று நம்புகிறேன். அனைத்து திட்டங்களுக்கும் உங்கள் தந்தையின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டி அவர் அறிமுகம் செய்த திட்டத்திற்கு மட்டும் அவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் அது அவரது ஆன்மாவிற்கு இழைக்கும் துரோகம் இல்லையா? வரலாறு உங்களை மன்னிக்காது அல்லவா? தமிழக முதல்வர் அவர்களே நான் முன்வைத்துள்ள கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்..!!" என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.