தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!
Dhinasari Tamil March 15, 2025 02:48 AM

#featured_image %name%

2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. முன்னதாக, முன்னாள் திமுக., முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் என்றார்.

இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய போது, அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அண்மையில் தமிழக அரசின் சாராயக் கடைத் துறையான டாஸ்மாக் துறையில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக பேச அனுமதி மறுத்ததாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் முக்கியமான பகுதிகள்…

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்

திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்

அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்

சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்

இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்

புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு.

பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்-நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்

கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு

100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்

மகளிர் விடியல் பயண திட்டம் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.

சுய உதவிக்குழு திட்டத்திற்கு ரூ.37000 கோடி ரூபாய் கடன்கள் வழங்க திட்டம்.

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்.

சென்னைக்கு அருகில் 2000 ஏக்கரில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம்.

புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும்.

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்த ரூ.160 கோடி ஒதுக்கீடு.

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.2000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

மூத்த குடிமக்களுக்கான ரூ.10 கோடியில் அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

தமிழக பட்ஜெட்டில் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு.

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில், செயற்கை நுண்ணறிவு (AI) இணையப் பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்.

2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.

பள்ளி பாடத்திட்டத்தில் செஸ்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும்.

அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.

சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.

777 கோயில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனடைகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி பெறும் வகையில் சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்.

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்

சென்னை – திண்டிவனம் – விழுப்புரம்
சென்னை – காஞ்சிபுரம் – வேலூர்,
கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம்
– மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.

நடப்பாண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% சலுகை.

தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் மீண்டும் அமல்.

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் உள்ள்ட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

2676 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 2000 பள்ளிகளில் ரூ160 கோடி மதிப்பில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இருக்கும் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ56 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

வரும் நிதியாண்டில் 1721 முதுகலை ஆசிரியர்கள், 840 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்.

‘நான் முதல்வன் கல்லூரிக் கனவு’ திட்டம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் அகில இந்திய உயர்கல்வி, வெளிநாட்டு பல்கலை. கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு சென்றடைய முயற்சிகள் எடுக்கப்படும்.

முதற்கட்டமாக 388 ஊராட்சி ஒன்றியங்களில் 500 அரசுப் பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் சிறப்புப் பயிற்சி.

பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கில் பாப்பிரெட்டிப்பட்டி, சத்தியமங்கலம், சின்னசேலம், தாளவாடி, கல்வராயன் மலை, தளி, கோத்தகிரி, ஜவ்வாதுமலை ஆகிய இடங்களில் உள்ள 14 உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

சேலம், கடலூர், நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26; நிதி விபரங்கள்.

வருவாய்: மொத்த வருவாய் ரூ.3.31 லட்சம் கோடியாக இருக்கும். இதில், சொந்த வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பீடு.

வரியில்லாத வருவாயாக ₹28,818 கோடி கிடைக்கும் என மதிப்பீடு. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப் பங்கீடு ரூ.58.021 கோடியாக மதிப்பீடு.

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்கள் வரும் நிதியாண்டில் ரூ.23,834 கோடியாக மதிப்பீடு.

செலவினம்: மொத்த செலவினம் ரூ.373 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கடன் வட்டி செலவீனம் ரூ.70,753 கோடியாக இருக்கும். மானியங்கள் உள்ளிட்ட செலவினங்கள் ரூ.1.53 லட்சம் கோடியாகவும், ஓய்வுதியம் வகை செலவினமாக ரூ41,290 கோடி இருக்கும் என மதிப்பீடு.

மூலதனக் கணக்கு: 2024-25 நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.46,766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் இது ரூ.57,230 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. – இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து விவாதம், மானிய கோரிக்கை உள்ளிட்டவை நடத்த ஏப்.30 வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.