மார்ச் 28ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் !
Dinamaalai March 15, 2025 02:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்  மார்ச் 28 ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், "கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை இவைகளுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி   அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.