ஐபிஎல் 2025: ஒரு அணியில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் காயம் அடைந்தால் என்ன செய்யலாம்? பிசிசிஐ அறிவிப்பு..!
Tamil Minutes March 14, 2025 11:48 PM

 

ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது, விக்கெட் கீப்பருக்கு பதிலாக மாற்றுவீரரை களம் இறக்குவது குறித்த புதிய விதியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பொதுவாக, ஒரு அணியில் இரண்டு அல்லது மூன்று விக்கெட் கீப்பர்கள் இருப்பார்கள். ஒரு விக்கெட் கீப்பர் காயமடைந்தால், உடனே மாற்றுவீரரை களத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் இதுவரை நடைமுறையாக இருந்தது.

இந்நிலையில், ஒரு அணியில் உள்ள இரண்டு விக்கெட் கீப்பர்களும் காயமடைந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு அணியில் உள்ள அனைத்து விக்கெட் கீப்பர்களும் காயமடைந்தால் அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் அணியிலிருந்து விலகினால், இந்த ஆண்டு ஏலத்தில் விற்கப்படாத விக்கெட் கீப்பர்களில் இருந்து யாராவது ஒருவரை தேர்வு செய்யலாம்.

அந்த வீரரின் அடிப்படை விலை, விலகிய வீரரின் விலையுடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். காயம் காரணமாக விலகிய விக்கெட் கீப்பர் குணமடையும் வரை, புதிய வீரரை அணியில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், பின்னர் அணியில் இருந்து விடுவிக்கலாம்.

ஆனால், புதிதாக தேர்வு செய்யப்படும் வீரர் இந்திய வீரராக மட்டுமே இருக்க வேண்டும். வெளிநாட்டு வீரரை மாற்ற முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த புதிய விதியை அனைத்து அணிகளும் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிசிசிஐ, ஏலத்தில் விலை போகாத வீரர்கள் பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பட்டியலில் உள்ள வீரர்களில் இருந்து மட்டுமே ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.