காத்து மேலே, காத்து கீழே, காத்து சைடுலன்னு... நாலாப்பக்கமும் ஃபேனை சுத்த விட்டுட்டு உட்கார வேண்டிய வெய்யில் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வழக்கத்தைவிட 2 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்னொருபுறம் சைடில் சூட்டைக் கிளப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றத்தினால், Spring, Summer, Autumn, Winter... என்று நான்கு வகையான பருவங்கள் இருந்த காலம் மாறி, இப்போதெல்லாம், Hot, Hotter, Hottest... என்று பருவங்கள் மூன்றாகச் சுருங்கிவிட்டன.
வெய்யில் அதிகமானால் பொதுமக்களுக்குத்தான் திண்டாட்டம். ஆனால் மின்விசிறி செய்யும் கம்பெனிகளுக்கு இதுதான் சூப்பர் சீசன். நம் நாட்டில் ஆண்டுக்கு நான்கு கோடி மின்விசிறிகள் விற்பனையாகிறது என்றால் இதில் பெரும்பகுதி இந்தக் கோடை காலத்தில்தான் விற்பனையாகிறது.
முன்பெல்லால் ஃபேன் என்றால், `ஸ்விட்சை போட்டால் காத்து வருதா?' என்று மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மின் அழுத்தத்தோடு மின்சாரம் கிடைத்தாலும் மோட்டார் அடிவாங்காமல் மின்விசிறி சுற்றுமா என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.
அதேப் போல, குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி செயல்படும் மின்விசிறி வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தானாகவே ஆஃப் ஆகிவிடும் ஃபேன்... அதாவது டைமர் வசதி கொண்ட ஃபேன் வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல,IOT எனெபில்டு இருக்கா. APP இருக்கா, அந்த APP அலெக்ஸாவோட இணைந்து வேலை செய்யுமா, கூகிள் ப்ளேவோட கனெக்ட் பண்ண முடியுமா... என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
மின்விசிறிக்கு ரிமோட் கண்ட்ரோல் இருந்தால் மட்டும் போதாது, டிவி ரிமோட்டும், ஃபேன் ரிமோட்டும் ஒரே இடத்தில் இருந்தால்... தொலைகாட்சி ஃப்ளிக் ஆகும். அதாவது `கண்டக்டெட் எமிஷன்' நடக்கக்கூடாது என்பது வாடிக்கையாளர்களின் இன்னொரு எதிர்பார்ப்பு. ரிமோட்டை மின்விசிறியை நோக்கி பிடித்து இயக்கினால் மட்டும்தான் வேலை செய்யும் என்று இருக்கக்கூடாது. ரிமோட்டை எந்த பக்கம் வைத்து இயக்கினாலும் ஃபேன் அதற்கு கட்டுப்பட வேண்டும்.
சரி, இத்தனை அம்சங்களோடு மின்விசிறியை கொடுத்தால் இவை அனைத்தையும் எல்லா வாடிக்கையாளர்களும் பயன்படுத்துவார்களா என்று கேட்டால்... ஐஃபோனையே உதாரணமாக காட்ட வேண்டிவரும். ஐஃபோனில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் இருக்கும். ஆனால் வாட்ஸ் ஆப், ரீல்ஸ் பார்ப்பது, போன் பேசுவது என்று ஒரு சில விஷயங்களுக்காக மட்டும்தான் அதைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஐபோனில் இருக்கும் மற்ற நூறு அம்சங்கள்தான் அதை வாங்க வைக்கிறது. இதேதான் மின்விசிறிகளிலும் இப்போது நடக்கிறது.
மின்விசிறிகள் சந்தையை மாற்றியிருக்கும் இன்னொரு விஷயம் - அதிகரித்துவரும் புவிவெப்பம். குறைந்த மின் ஆற்றலைப் பயன்படுத்தி செயல்படும் மின்விசிறிகளை உற்பத்திச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவந்துவிட்டது. ஏசிக்கு 5 ஸ்டார், 4 ஸ்டார் என்று ரேட்டிங்ஸ் கொடுப்பதைப் போல மின்விசிறிகளுக்கும் இப்போது ஸ்டார் ரேட்டிங்ஸ் வந்துவிட்டது. முன்பிருந்த மின்விசிறிகள் எல்லாம் 70 முதல் 80 வாட்ஸ் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில் இப்போது 5 ஸ்டார் முத்திரைப் பெற்ற மினிவிசிறி என்றால் அது 25 முதல் 35 வாட்ஸ் மின்சாரத்தில்தான் இயங்குகின்றன.
வாடிக்கையாளர்களின் விருப்பு மற்றும் தேர்வு மாறுகிறது. அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கிறது. இன்னொருபுறம் தொழில்நுட்பம் வளர்கிறது. முன்பு மின்விசிறிகள் என்றால் அதில் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கோட்பாடுகளின்படி இயங்குவதாக மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது இந்த இரண்டையையும் தாண்டி எலெக்ட்ரானிக்ஸ் அதிகமாக ஆதிக்கம் செலுத்த ஆரமித்துவிட்டது.
ஃபேன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்க்கு, ``எந்த ஃபேன் அதிகமாக விற்பனையாகிறது.. என்று தொடங்கி எந்த வகையான மின்விசிறிகள் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும். எந்த மின்விசிறியில் நவீன அம்சங்களும் வசதிகளும் இருக்கின்றன, எந்த தொழில்நுட்பம் கொண்ட மின் விசிறிகள் நீடித்து உழைப்பதோடு அதிகமானக் காற்றை வீசும்'' ஆகிய தகவல்கள் எல்லாம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சீலிங் ஃபேன்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்பதால்... இந்தக் கடமை மற்ற அனைவரையும்விட தனக்கு அதிகம் இருப்பதாக சொல்லும் கிராம்டன் இத்தகைய விழிப்புணர்வைப் பொது மக்களிடம் ஏற்படுத்திவருகிறது. இது குறித்து அந்தக் கம்பெனியைச் சேர்ந்த காளீஸ்வரன் அருணாச்சலம் சக அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டாக பேட்டியளித்தார்.
``கிராம்டன் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் கிராம்ப்டனின் இதயம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவின் பிறபகுதிகளில் 100 மினிவிசிறிகள் விற்பனையால், அதில் 30 மின்விசிறிகள் எங்கள் மின்விசிறிகள். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கிறது. 85 ஆண்டுகளாக இருக்கும் கம்பெனி என்பதால்... முப்பது நாற்பது ஆண்டு பழைய மின்விசிறிகளைக்கூட ஒரு சில வீடுகளில் பார்க்கக்கூடும். ஏன் ஐம்பது ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிகளைகூட சில வீடுகளில் நீங்கள் பார்க்கலாம். தாத்தா, அப்பா, பேரன் என்று தலைமுறைகள் தாண்டி இருப்பதால் இது பல குடும்பங்களில் ஒரு அங்கமாகவே மாறியிருப்பதைப் பார்க்க முடியும். அதனால்தான் கிராம்டன் என்பது ஜெஸ்ட் ஒரு பிராண்ட் இல்லை. அது தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒரு எமோஷன்.
தாத்தா பாட்டி ஆரம்பித்து ஜென் Z, ஜென் ஆல்ஃபா வரை கிராம்ப்டன் நல்ல பெயர் எடுத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம்... காலத்துக்கு ஏற்றவாறு அதன் தொழில்நுட்பமும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான்.
ஃபேன் என்றாலே இன்டக்ஷன் மோட்டாரில் இயங்கும் ஃபேன்தான் என்று இருந்தது. ஆனால், இப்போது நியூக்லியஸ் என்ற பெயரில் மேம்பட்ட BLDC (Brushless Direct Current) தொழில்நுட்பத்தில் செயல்படும் மின்விசிறிகளையும் கொண்டு வந்திருக்கிறோம். இந்த புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்குவதால் மின் கட்டணம் குறையும். ஆனால், 260 CMM (Cubic Meters per Minute) என்ற அளவில் காற்றை வீசக்கூடியது.
இந்தியாவிலேயே இதுதான் அதிக சுற்றளவுக்கு காற்றை வீசக்கூடிய மின்விசிறி. குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்குகிறது என்பதால் சுற்றுசூழலுக்கும் உகந்தது. ஆனால், இது இன்டக்ஷன் மோட்டாரில் இயங்கும் மின்விசிறிகளைவிட சற்றே விலைக் கூடுதலாக இருக்கும். இதில் இன்னொரு வசதி என்னவென்றால் BLDC தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகளை ரிமோட் மூலமும் கட்டுப்படுத்த முடியும்.
மின்சார கார்கள் வந்துவிட்டது என்பதால் அனைவரும் மின்சார கார்களுக்கு மாறிவிட மாட்டார்கள். அதனால்தான் பெட்ரோலில் இயங்கும் கார்களும் விற்பனையாகின்றன. அதேப் போலத்தான் என்னதான் BLDC மின்விசிறிகள் வந்தாலும் இன்டக்ஷன் மோட்டாரில் இயங்கும் மின்விசிறிகளையும் மக்கள் தொடர்ந்து வாங்குவார்கள் என்பதால் XTech என்றப் பெயரில் அந்த தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தியிருக்கிறோம்.
மின்விசிறிகள் தாண்டி லைட்ஸ், வாட்டர் ஹீட்டர், மிக்ஸி என்று ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் நாங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக மட்டும் ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவிடுகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 19 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறோம்'' என்று சொன்ன காளீஸ்வரன் தங்கள் வெற்றியின் இரகசியத்தையும் கடைசியில் சொன்னார்.
``எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம், முழுக்க முழுக்க எங்கள் கம்பெனியைவழிநடத்துவது ஊழியர்கள்தான்''