தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு பாதுகாப்பு துறையில் வீட்டிற்கு தேவையான நீடித்து உழைக்கக்கூடிய பொருட்களுக்கு கடன் உதவி தமிழக அரசின் சார்பாக வழங்கப்படுகிறது. அதாவது டிவி குளிர்சாதன பெட்டி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அதன் விலையில் 75% தொகை கடனாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு 14 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். மேலும் இதுபோன்ற திட்டங்களில் பயனடையாத அனைவருமே விண்ணப்பிக்கலாம். அதேபோல இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அடையாள சான்று, முகவரி சான்று, வாங்கும் பொருளுக்கான விலை பட்டியல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.