தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை பாஜகவால் வழங்க முடியும்: டி.டி.வி.தினகரன் பேட்டி..!
WEBDUNIA TAMIL March 15, 2025 01:48 AM

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதாவின் ஆட்சியை தருவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால் அதை மக்களுக்காக செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் மட்டுமே ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்," என்று கூறினார்.

"ஜெயலலிதாவும் மோடியும் நல்ல நண்பர்கள். 'மோடியா லேடியா?' என்று ஜெயலலிதா கேட்டது. பிரதமராக மோடி வேண்டும், முதலமைச்சராக ஜெயலலிதா வேண்டும்' என்ற அடிப்படையில் தான்," என அவர் தெரிவித்தார்.

மேலும், "பெரியார் கூறிய கருத்தைதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை," என்றும் அவர் கூறினார்.

திமுக திருந்தி இருக்கும் என்று நம்பியதால் 2021 ஆம் ஆண்டு மக்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

"ஜெயலலிதாவின் ஆட்சியை பாஜக தான் வழங்க முடியும்," என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.