TN Budget 2025: பள்ளியில் செஸ் பாடம் டு மாணவர்களுக்கு Tap வரை ! - கல்வி தொடர்பான அறிவிப்புகள்
Vikatan March 14, 2025 09:48 PM

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல முக்கிய அறிவிப்புகள் தமிழக பொது பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கின்றன. அந்தவகையில் கல்வி தொடர்பாக வெளியாகி இருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

Budget 2025-26

கல்வி தொடர்பாக வெளியாகி இருக்கும் முக்கிய அறிவிப்புகள்

* QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைகழகத்தை இடம்பெற செயல் திட்டம்

* நீலகிரி, சென்னை உள்பட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு புதிதாக 15,000 இடங்கள் உருவாக்கப்படும்

* வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்

* அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்வு

* புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு

* ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும்; இதற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு

* அரசுப்பள்ளிகளில் ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் தரம் உயர்த்தப்படும்

* மலைப்பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

* பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்

Budget 2025-26

* போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்

* 2676 அரசுப்பள்ளிகளில் ரூ.65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

* பள்ளிக் கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

* அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளில் இலவச மடிக்கணினி, அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி( Tap) அல்லது மடிக்கணினி( Laptop) வழங்கப்படும்.

* இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு என்று மொத்தம் 46.767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.