சென்னை சிந்தாரிப்பேட்டையில் முஷாமல் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவரது காரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் அங்கு மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து, டிக்கியில் இருந்த ரூபாய் ஆறு லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.