அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News March 19, 2025 10:48 AM

பொதுவாக சில மரங்களின் இலைகள் மற்றும் மர பட்டைகள் நம் உடலுக்கு நன்மைகள் சேர்க்கிறது ,அந்த வகையில் அசோக மர பட்டைகள் நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும் பல் வேறு நோய்களும் குணமாகும்.
2.அசோகமரப்பட்டை மருதமரப் பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, இதய நோய்கள் குணமாகி பல நோயின்றி வாழலாம்  
3.அசோகமரப்பட்டை 50 கிராம் இடித்து தண்ணீரில்(இரண்டு லிட்டர்) நான்கில் ஒரு பங்காக சுண்டவைத்து கசாயம் காய்ச்சி குடித்தால் பல கருப்பை நோய்கள் குணமாகி நம் உடல் புத்துணரவுடன் இருக்கும் .


4.அசோகமரப்பட்டை 100 கிராம் பெருங்காயம் 5 கிராம் இரண்டையும் சேர்த்து பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவில் வெந்நீரில் கலந்து குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி  குணமாகும்
5.அசோக மரப் பூக்களை உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டால் நீண்ட நாள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து நம் ஆரோக்கியம் காக்கப்படும்
6.அசோக மரப் பூ, மாம்பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பவுடராக்கி, பாலில் கலந்து குடித்துவந்தால் தீராத சீதபேதி குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும் .
7.அசோக மரப்பட்டை (அரை கிலோ), சீரகம் (50 கிராம்) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் இருந்த ரத்த அழுத்தம் குணமாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.