அரசு ஊழியர்களுக்கு செக்….! போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!
SeithiSolai Tamil March 19, 2025 02:48 PM

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.